காதலர் தின வாழ்த்து

ஈருடல் ஓர் உயிராய் இருத்தல் தான் காதல் எனில்
மரண வாயிற் வரை சென்று என்னை ஜனித்த
தாய்க்கு கூறுகிறேன்
இனிய காதலர் தின வாழ்த்துகள்..

நினைவுகளை காலம் கடந்து சுமப்பது தான் காதல் எனில்
என் பிஞ்சு விரல்களை தோள்களிலும் பொறுப்புகளை நெஞ்சினிலும் சுமக்கும்
தந்தைக்குக் கூறுகிறேன்
இனிய காதலர் தின வாழ்த்துகள்..

பகிர்தலும் விட்டு கொடுத்தலும் தான் காதல் எனில்
என் வாழக்கை கனவுகளுக்கு ஒளியேற்ற தன் படிப்பிற்கு விடைகொடுத்த
உடன்பிறந்தவனுக்கு கூறுகிறேன்
இனிய காதலர் தின வாழ்த்துகள்..

சுக துக்கங்களை ஒன்றாய் பகிர்தல் தான் காதல் எனில்
இரத்த பந்தம் கடந்து நான் வாழ்க்கையில் வீழ்கயில் எல்லாம்
தோளுக்கு தோளாய் நிற்கின்ற நண்பனுக்கு கூறுகிறேன்
இனிய காதலர் தின வாழ்த்துகள்..