பார்வை

ஹலோ எப்படி இருக்கீங்க .. நான் !! அட என்னை பத்தி சொல்லிக்க பெருசா ஒன்னு இல்லங்க.. ஆங் என் பேர் என்னனு கேக்கறீங்களா சொல்றேன் சொல்றேன் அதுக்கு இன்னும் நேரம் இருக்கு .. முதல்ல எதுக்கு கூப்பிட்டேன்னு சொல்லிடறேன் எனக்கு நாளைக்கு கல்யாணம் அதான் உங்கள கூப்பிட வந்தேன்.. என்னது என் காதல் கதையை பத்தி சொல்லனுமா.. சரி கேட்டுடீங்க அதனால சொல்றேன்.. படத்துல வர்ற மாதிரி காவிய காதல் எல்லாம் இல்லேங்க ,சாதாரண காதல் தான்.. எங்க ஊர்ல படிச்சவங்கள கை விட்டு எண்ணிடலாம்..அதுல நானும் ஒரு முக்கிய புள்ளி.. பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு என்ஜினீயர் கனவோடு இந்த சின்ன கிராமத்துலேந்து சிங்கார சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.. கல்வியே கடவுள் என்று நான் இருந்தப்போ தான் இளையராஜா பாட்டு,லேசான மழை இதுக்கு நடுவுல அந்த கண்களை எதேச்சையா பார்த்தேன்.. யாரை பாத்தாலும் பட்டுனு கண்ண பாத்து பேசுற என்னால அந்த கண்களை மட்டும் ஏறேடுத்தும் பாக்க முடியல.. பிறகு என்ன.. அந்த கண்கள் இருக்கற எல்லா வகுப்புலயும் நான் நீக்கமற நெறஞ்சிருந்தேன். எந்நேரமும் அந்த கண்களை பார்த்துட்டே இருப்பேன்..அது என்னை நோக்கி திரும்பும் போது மட்டும் என் தைரியம்லாம் காணாம போய்டும்.. இப்பிடியே நாட்கள் நகர நகர நண்பர்களும் என் நடவடிக்கையை பார்த்து கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. என்னங்க பண்றது எல்லாம் காதல் படுத்தும் பாடு.. அந்த கண்கள் காட்டற பாவம் இருக்கே !!அதுல காதல்,சந்தோஷம் எதுமே இருக்காது ,வெறும் ஒரு வெற்று பார்வை மட்டும் தான் . அந்த பார்வைக்கு என்னை அர்த்தம்னு அதோட உரிமையாளரை தான் நீங்க கேட்டு தெரிஞ்சுக்கணும்.. வெற்று பார்வைக்கே எவ்ளோ நாள் தாங்க பதில் சொல்றது..அதான் மொத்த திடத்தோடயும் போயி என் காதலை சொன்னேன்.. உடனே ஒகே னு பதில் வந்துடுச்சு..அது வெத்து பார்வை இல்லயாம் காதல் பார்வையாம் ..

அப்படியே காத்துல மெதக்கற மாதிரி இருந்துச்சு..என்ன சுத்தி பத்து பேர் வயலின் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. என்னது அது வயலின் இல்லையா நாதஸ்வரமா.. ரைட்டு விடுங்க நான் பொய் கல்யாணத்துக்கு ரெடி ஆகுறன்.. அவ்ளோதாங்க கதை முடிஞ்சிருச்சு.. ஆங் என் பேரு பிரியா ..ஏங்க ஷாக் ஆகுறீங்க பசங்க மட்டு தான் கண்ண பத்தி கவிதை எழுதுவங்களா.. நாங்களும் எழுதுவோம்..