செல்வ திருமகளே

செல்வ திருமகளே வருவாய்
செல்வ திருமகளே வருவாய்
எம் அன்னையே நீ
செல்வ திருமகளே வருவாய்

சலங்கையின் நாதம் கால்களில் ஒலிக்க
மங்கள திருவடி பூமியை வருட
புனிதர்கள் செய்திடும் பூஜை நேரத்தில்
மோரினில் திகழும் வெண்ணெயை போல

செல்வ திருமகளே வருவாய்

தங்க மழை நீ பொழிந்தே வருவாய்
எம் மனதினிலே நிறைவை தருவாய்
ஆயிரம் கோடி ஞாயிறு ஒளியாய்
ஜனகரின் மகளே விரைந்தே வருவாய்

செல்வ திருமகளே வருவாய்

அங்கிங்கு அகலாது அடியார் இல்லத்தில்
என்றும் இன்பம் என்றும் மகிழவே
வாய்மையே உயிரை வாழிந்திடும் அடியார்
சிந்தையில் ஒளிரும் புத்தொளி சுடரே

செல்வ திருமகளே வருவாய்

கணக்கே இல்ல நிறப்பொருள் தருவாய்
கரங்களில் வளையல் குலுங்கிட வருவாய்
குங்கம மேனியள் தாமரை விழியாள்
வெங்கட்ரமணனின் பட்டது ராணியே

செல்வ திருமகளே வருவாய்

நெய்யுடன் சக்கரை பாலுடன் படைத்தே
வெள்ளிக்கிழமை பூஜை வேளையில்
எக்கன மறவா அழகிய ரங்கனின்
சொக்கு புரந்தர விட்டலனின் ராணியே

செல்வ திருமகளே வருவாய்